ஈரானை 'கற்காலத்திற்கு'த் திருப்பியனுப்ப அமெரிக்காவின் பச்சைக்கொடிக்காக காத்திருக்கும் இஸ்ரேல்
ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கி, அதனை "இருண்ட மற்றும் கற்காலத்திற்கு"த் திருப்பியனுப்பத் தனது நாடு தயாராக இருப்பதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "முதலும் முக்கியமுமாக, கமெனி வம்சத்தை முற்றிலுமாக ஒழிக்கும் பணியை நிறைவு செய்வதற்காக, அமெரிக்காவிடமிருந்து பச்சைக்கொடிக்காக இஸ்ரேலிய இராணுவம் காத்திருக்கிறது" (போரின் முதல் நாளிலேயே அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்).
இந்த முறை தாக்குதல் வித்தியாசமாகவும், கொடியதாகவும் இருக்கும்
மேலும், எரிசக்தி மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளைத் தாக்குவதன் மூலம் "ஈரானை இருண்ட மற்றும் கற்காலத்திற்கு"த் திருப்பியனுப்ப உள்ளதாகவும் அவர் அச்சுறுத்துகிறார்.

"இந்த முறை தாக்குதல் வித்தியாசமாகவும், கொடியதாகவும் இருக்கும். மேலும், அதன் அடித்தளங்களை அசைத்துத் தகர்க்கும் வகையில், மிகவும் வேதனையான இடங்களில் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை அது சேர்க்கும்," என்று காட்ஸ் குறிப்பிட்டார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர "ஏற்றுக்கொள்ளக்கூடிய" ஒரு உடன்பாட்டிற்கு வராவிட்டால், ஈரானை "கற்காலத்திற்குத் திருப்பியனுப்புவதாக" ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலை இஸ்ரலிய பாதுகாப்பு அமைச்சரின் கூற்று எதிரொலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |