காசாவுக்கான மனிதாபிமான கப்பல்களை இடைமறித்த இஸ்ரேல்
காசாவிற்கு (Gaza) அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய (Israel) கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளதாக சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகின்றது.
இந்தநிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில் ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி
இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.
Already several vessels of the Hamas-Sumud flotilla have been safely stopped and their passengers are being transferred to an Israeli port.
— Israel Foreign Ministry (@IsraelMFA) October 1, 2025
Greta and her friends are safe and healthy. pic.twitter.com/PA1ezier9s
இந்த குழு நேற்று (02) உதவிகளுடன் காசாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இராணுவம்
இருப்பினும், காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Here’s the moment Israel intercepted the Flotilla boat Adara, captured by journalist Kieran Andrieu@novaramedia pic.twitter.com/vOZ5gWTmQk
— Global Sumud Flotilla Commentary (@GlobalSumudF) October 1, 2025
அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.
கப்பல்கள்
குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோதல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என இஸ்ரேலிய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் மற்றும் அவர்களின் பாதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுமுட் புளோட்டிலா குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலிய கடற்படையானது அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகிய கப்பல்களை இடைமறித்து கப்பல்களில் ஏறி நேரடி தகவல்தொடர்புகளைத் துண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
