தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதல்கள்! இஸ்ரேலின் கோர முகம் அம்பலம்
காசா மீது இஸ்ரேல் மிகவும் கொடூரமான தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று திடீரென பாலஸ்தீன ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இதனால் இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து இன்னும் போர் தொடர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதன் போது இஸ்ரேல் காசா மீது தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு
நரக வேதனைக்கு தள்ளக் கூடியவை
இந்த வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகள் பூண்டுவாசனை கொண்ட ஒரு மெழுகு பொருளாகும். இவை வீசப்பட்ட இடத்தில் இருந்து பல மைல் தூரத்திற்கு புகை மண்டலமாக பரவக்கூடியது.
மேலும், இவை மனித தோல் வெந்து உருகும் அளவிற்கு தீக்காயங்களை ஏற்படுத்தி மனிதர்களை நரக வேதனைக்கு தள்ளக் கூடியவையாகும்.
அத்தோடு, குழந்தைகளுக்கு மூச்சுத்திணரலை ஏற்படுத்தக் கூடியவை அதுமட்டுமல்லாமல் இரத்த புற்று நோயை கூட ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இதை குடியிருப்புப் பகுதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் மீறி பயன்படுத்தினால் அது போர் குற்றம் ஆகும் என ஐ.நா கூறியுள்ளது.
குற்றச்சாட்டுகள்
இந்நிலையில், காசா மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் காணொளி ஆதாரத்துடன் வெளியாகியுள்ளன.
ஆனால், இஸ்ரேல் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது முதல் முறையல்ல இதற்கு முன்பும் கடந்த 2006 ஆம் ஆண்டு லெபனான் போரிலும் அதற்கு பிறகு 2008 மற்றும் 2009 களிலும் இதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும்,2ம் உலகப் போர் பிறகு அமெரிக்கா, ஈராக் மற்றும் ஆப்கான் போர்களின் போதும் இந்த குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போரின் போதும் ரஷ்யா வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனால் ரஷ்யா அவற்றை மறுத்துள்ளது.