இஸ்ரேலின் நடவடிக்கை போர்க் குற்றமென அறிவிப்பு
இஸ்ரேல், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்படவில்லை எனக் கூறியுள்ள கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி, அல் ஷிஃபா வைத்தியசாலை மீதான இஸ்ரேலின் நடவடிக்கை மற்றும் முற்றுகையானது போர்க் குற்றமென கூறியுள்ளார்.
ஹமாஸ் இயக்கத்தின் பிடியிலுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் விடயத்தில் சிறிய தடைகளே உள்ளதாகவும் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி தெரிவித்துள்ளார்.
அதிகமான நோயாளர்கள்
காசா நகரில் உள்ள மிகப் பெரிய அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து உரிய காலத்திற்கு முன்னர் பிறந்த 30 குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட குழந்தைகள் தெற்கு காசாவில் உள்ள ஐரோப்பிய மற்றும் நாஷார் வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக தெற்கிலுள்ள பல வைத்தியசாலைகள் அதிகமான நோயாளர்களால் நிரம்பிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.