தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயார்! இஸ்ரேல் அறிவிப்பு
சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதி மன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது.
சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம் சாட்டிய தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தது.
தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டு
ஒக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை அரசியல் மற்றும் சட்டத்தைக் கொண்டு மறைக்கும் முயற்சி இது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் இந்த அபத்தமான குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்க்கவிருப்பதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பு மட்டுமே பொறுப்பு
மேலும், 'காசாவின் மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகளுக்கு ஒளிந்திருக்கும் ஹமாஸ் அமைப்பு மட்டுமே இந்த போருக்கு முழு பொறுப்பு' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வரும் ஜனவரி 11 மற்றும் 12-ல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |