ஹமாஸ் தலைவர்களை கொல்லுங்கள் : மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
உலகில் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள் என தமது நாட்டின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டளையிட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவிற்கு வந்த நிலையில் தற்போது காசா மீது மிக மோசமான தாக்குதல்களை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமரின் உத்தரவு
இந்தநிலையில், இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தலைவர்களை காசாமுனை மட்டுமன்றி உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுமாறு தங்கள் நாட்டின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
திட்டம் தீட்டும் மொசாட்
இந்த உத்தரவையடுத்து, ஹமாஸ் தலைவர்களை கண்டுபிடிப்பதற்கான திட்டங்களை இஸ்ரேல் உளவுத்துறை மொசாட் தீட்டி வருகிறது.
துருக்கி, கத்தார், லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |