அடங்க மறுக்கும் இஸ்ரேல் : ஒரேநாளில் 100க்கும் மேற்பட்ட காஸா மக்கள் படுகொலை
காஸாவில்(gaza) இஸ்ரேல்(israel) படையினர் நேற்று(வெள்ளிக்கிழமை) நடத்திய கொடூர தாக்குதலில் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கொடூரமான நாள் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ரத்தக்களரியாக இருந்தது என்றும் அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டி, காஸாவின் தென்மேற்கே தண்ணீருக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் கூறுகிறது. 2 குழந்தைகள் மற்றும் ஒரு இளம்வயது நபர் பசியால் இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
உணவின்றி பசியால் உயிரிழந்த குழந்தைகள்
காஸாவில் உணவின்றி பசியால் இதுவரை 92 குழந்தைகள் உள்பட 162 பேர் இறந்துள்ளனர்.

தொடர்ந்து இன்று(02) காலை இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
காஸா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 60,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 147,643 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 7 தாக்குதலின்போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாகவும் 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |