ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்திய ஈரானின் கடற்படை தளபதி வீழ்த்தப்பட்டார்!
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், குறித்த தகவல் தொடர்பில் ஈரானிய தரப்பில் இருந்த எந்தவொரு அதிகார்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான தங்கள் தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து, டங்சிரி தனது கருத்துக்களை வெளிப்படையாகவும் தீவிரமாகவும் வெளிப்படுத்தி வந்த ஒருவர் ஆவார்.
கடற்படையின் நடவடிக்கை
அத்தோடு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஏறக்குறைய முழுமையாகத் தடுப்பதற்குப் பின்னால் அவர் ஒரு முக்கிய நபராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

போர் முழுவதும் சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த டங்சிரி, சமீபத்தில் X தளத்தில் பதிவிட்டு, நீரிணை வழியாக எந்தவொரு கப்பலும் செல்வதற்கு ஈரானின் கடல்சார் அதிகாரசபையுடன் முழுமையான ஒருங்கிணைப்பு தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வளைகுடாவில் IRGC கடற்படையின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் அவர் அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |