மத்திய கிழக்கு போரில் இராஜதந்திர தரகராக இந்தியா! எதிர்பார்ப்புக்களை தூண்டியுள்ள அழைப்பு
மத்திய கிழக்கு பகுதியில் தற்போது அதிகரித்துள்ள பதட்டங்களை குறைப்பதில் இந்தியா ஒரு நம்பகமான பங்காளி ஆக செயல்பட முடியும் என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இந்தியா அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் வரலாற்று ரீதியான மற்றும் மூலோபாய உறவுகளைப் பேணி வருகிறது.
இராஜதந்திர பாதை
இது, புரிந்துணர்வுகளைக் குறைத்து, இராஜதந்திர பாதைகளை வலுப்படுத்துவதில் இந்தியாவை நம்பகமான தரகராக மாற்றுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “குளோபல் சவுத்ன் முக்கிய நாடாகவும், சமநிலையான வெளியுறவுக் கொள்கை கொண்ட நாடாகவும் இந்தியா, பதட்டங்களைத் தணிக்கவும், உரையாடலை ஊக்குவிக்கவும் செயல்திறன்மிக்க மற்றும் நேர்மறையான பங்கை வகிக்க முடியும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் பேசிய ஃபத்தாலி,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற ‘ஆக்கிரமிப்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்படும்.
இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதை உறுதி செய்யப்படும். இந்தியாவுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால நட்பு மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |