இன்று விண்ணுக்கு அனுப்பவிருந்த ககன்யான் விண்கல சோதனை நிறுத்தம்

India ISRO Chandrayaan-3
By Sathangani Oct 21, 2023 04:31 AM GMT
Report

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, டிவி-டி1 விண்கலம்  மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று (21) காலை 8 மணிக்கு  விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்ட  நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் தாமதம் ஆகலாம் என கூறப்பட்டது . இந்நிலையில் காலை 8.45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இயந்திரத்தில்  கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த திட்டத்தை  இன்று நடத்த  முடியவில்லை எனவும் இந்த கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்


இஸ்ரோ தீவிரம்

இதேவேளை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டிவருகிறது.

இன்று விண்ணுக்கு அனுப்பவிருந்த ககன்யான் விண்கல சோதனை நிறுத்தம் | Isro S Gaganyaan Mission Launch Today

‘விண்ணுக்கு செல்லும் வாகனம்’ என்று பொருள்படும் வகையில், ‘ககன்யான்’ என்று இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரும் இத்திட்டம் வரும் 2025ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட உள்ளது.

யாழ் தென்மராட்சி பகுதியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

யாழ் தென்மராட்சி பகுதியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு


அதற்கு முன்பு 3 கட்ட பரிசோதனைகளை நடத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது.

நிலவுக்கு மனிதனை அனுப்ப 

அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தின் (Crew Module) மாதிரி கலம், தரையில் இருந்து 17 கிலோ மீற்றர் தூரம் வரை அனுப்பப்பட்டு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டுவரப்படும்.

இன்று விண்ணுக்கு அனுப்பவிருந்த ககன்யான் விண்கல சோதனை நிறுத்தம் | Isro S Gaganyaan Mission Launch Today

இதில் ஏதேனும் ஒரு சூழலில் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தால், அதில் உள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த முதல்கட்ட சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒற்றை பூஸ்டர் (விகாஸ் இயந்திரம்) கொண்ட விண்கலம் பயன்படுத்தப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று


இந்த விண்கலம் மூலம் ஆளில்லாத விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான 13 மணி நேர கவுன்ட் -டவுன் நேற்று(20) இரவு 7 மணிக்கு தொடங்கியது.

2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025