யாழில் மோட்டார் சைக்கிள் பழக முற்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
Jaffna
Accident
Death
By Sumithiran
விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துன்னாலை மத்தி, கோயில்கடவையைச் சேர்ந்த சங்கர் சஞ்ஜீவன் (வயது-20) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
மோட்டார் சைக்கிள் பழக முயன்றபோது

இவர் கடந்த முதலாம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் பழக முயன்றபோது மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
தலைக்கவசம் அணியாத நிலையில் படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று (ஒக்.7) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி