யாழில் முக கவசம் அணியாதோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
srilanka
arrest
corona
jaffna
mask
By Vasanth
முக கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பிண்பற்றாமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கு தலா 1,000 ரூபா அபராதம் விதித்தார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா. அத்துடன் விசேடதேவை உடைய ஒருவருக்கு அவரது நிலையினை உணர்ந்த நீதிவான் 500 ரூபா அபராதம் விதித்தார்.
இந்த தண்டங்கள் யாவும் இன்று(25) விதிக்கப்பட்டது.
மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு அவர்களை எச்சரிக்கை செய்ததுடன் அபராதமும் விதித்தார்.