யாழ்ப்பாணத்தில் இன்றும் 15 பேருக்கு கொரோனா!!

srilanka jaffna patient
By Vasanth Apr 06, 2021 01:51 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டு அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 761 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 16 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி - யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் நாவாந்துறையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் பாற்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

மூவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள். மற்றொருவர் யாழ்ப்பாணம் மாநகரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் கொக்குவிலில் வசிப்பவர்.

வவுனியா பொது வைத்தியசாலை விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி