யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், மாவட்ட செயலக சூழலில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் (27) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்
அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில், மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |