யாழ். மயிலிட்டி மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : அமைச்சர் உறுதி
Sri Lanka Army
Jaffna
Ramalingam Chandrasekar
By Erimalai
யாழ்ப்பாணம் - மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் - சந்திரசேகர் மயிலிட்டி மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
மயிலிட்டி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள்
இந்த நிலையில் அங்கு மக்களோடு உரையாடிய போது பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விஜயத்தின் போது கடற்றொழில் அமைச்சருடன் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன், தெல்லிப்பளை அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்