முடக்கப்பட்டுள்ள யாழ்.மத்திய பகுதி வர்த்தகர்கள் தொடர்பில் அரச அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

srilanka corona virus jaffna
By Vasanth Apr 04, 2021 04:03 AM GMT
Report

யாழ்ப்பாண நகர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் தடையை நீக்கி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருமாறு கோரி யாழ் வர்த்தக சங்கம் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த 23.03.2021 வெள்ளிக்கிழமை தொடக்கம் நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதனால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் சில பாரபட்சமான விடயங்களும் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை தங்களுக்குத் தெரிவிக்கவிரும்புகின்றோம் எனவும் அந்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 1. வர்த்தகர்களின் செயற்பாடுகள் முற்று முழுதாக முடக்கப்பட்ட நிலையில் முடக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் , நிதி நிறுவனங்கள் , காப்புறுதி நிறுவனங்கள், நகை அடகு நிலையங்கள் போன்றவை வழமை போல் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும் நியாயமாக கருதமுடியாதுள்ளது.

2. கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுமார் 1440 நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அறிகின்றோம். இதில் ஆக 43 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பிரிவினரால் தெரிவிக்கப்படுகின்றது.

இது விகித அடிப்படையில் 3 வீதமாகக் கருதப்படுகின்றது. 3. நகரத்தின் முக்கிய பகுதி முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் மொத்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய முடியாதுள்ளது.

4. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தாக்கம் காரணமாக வர்த்தகத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையானது அவர்களை மேலும் பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 5. நாட்டின் எல்லா பகுதிகளிலும் கொரோனா தாக்கம் இருப்பது தாங்கள் அறிந்ததே. அப்படி இருக்கும் போது யாழ்ப்பாண நகர வர்த்கர்களை வர்த்தகம் செய்யவிடாது தடை விதித்து அவர்களை பாதிப்படையச் செய்திருப்பது கவலையளிக்கிறது.

6. தமிழ் சிங்களப் புத்தாண்டு வர இருக்கும் இவ்வேளையில் தாங்கள் ஏற்படுத்திய தடையானது வர்த்தகர்கள் , உள்ளூர் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் , விவசாய உற்பத்திப் பொருட்களில் ஈடுபடுவோர் என பல துறை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை பாரிய பாதிப்புக்களையும் , பாரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

7. நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகத்துறையை முடக்கிவிட்டு ஏனைய அதிகளவான மக்கள் கூடும் சில நிறுவனங்களுக்கு சகஜமாக செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இது எமது பகுதி வர்த்தகத்துறை பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கில் பாரபட்சமாக செய்யப்பட்டது என்று வர்த்தகர்கள் கருதுகின்றார்கள்.

8. பூட்டப்பட்டுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் அங்கே தொழில் புரியும் தொழிலாளர்களுக்கான நிவாரணத்தையும் தொழில் இழப்புக்கான நஷ்ட ஈட்டையும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகவே நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து எமக்கு நீதி வழங்குவதுடன் வரும் திங்கட்கிழமையிலுருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடைகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அந்த கடிதம் மூலம் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்