யாழில் போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் களமிறங்கிய பொலிஸார்! ஏற்க மறுத்த உறவுகள்
ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கு - கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாளாக அனுஸ்டிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், யாழ்ப்பாணம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில் போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்துள்ளனர்.
எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.
அதனால் போராட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் உறவுகள் தமது போராட்டத்தை தற்போதும் தொடர்கின்றனர்.





