யாழில் அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

Jaffna Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Laksi May 07, 2024 02:19 PM GMT
Report

யாழில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம்(jaffna)- உடுவில்(Uduvil) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில்(Inuvil )பகுதியில் உள்ள மத ஸ்தாபனம் ஒன்றின் வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் இந்த பகுதியில் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.

பேருந்தில் பயணித்த முதியவர் திடீரென உயிரிழப்பு!

பேருந்தில் பயணித்த முதியவர் திடீரென உயிரிழப்பு!

அனுமதியின்றி அழிக்கப்பட்ட வேம்பு

இந்நிலையில், அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள ஒருவரால் சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

யாழில் அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள் | Jaffna Oldest Tree Has Been Cut Illeagally

இதனை தொடர்ந்து,  அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 80,000 ரூபாவிற்கு குறித்த வேம்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதியன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு நபர் புகைப்படங்கள் எடுத்துள்ளதுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார்.

யாழில் அதிகரித்துள்ள வெப்பநிலை: சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

யாழில் அதிகரித்துள்ள வெப்பநிலை: சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

உரிய நடவடிக்கை

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன் சட்ட ரீதியான அனுமதிக்கான ஆவணங்களையும் காண்பிக்க மறுத்துள்ளார்.

யாழில் அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள் | Jaffna Oldest Tree Has Been Cut Illeagally

இந்நிலையில், இவ்விடயம் குறித்து உடுவில் பிரதேச செயலாளர், மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் மரங்களை பார்வையிட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், வெட்டப்பட்ட மரத்துக்கு அனுமதி கோரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சம்பவம் தொடர்பில் அதிகாரிகளும், ஆதீனமும் மௌனம் காப்பதானது எதிர்காலத்தில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு மேலும் வழியமைத்துக் கொடுக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

யாழில் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழில் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024