படையினரின் கரங்களை பிடித்து கதறி அழும் தாய்மார்! பலரையும் கண்கலங்க வைத்த நிமிடங்கள் (காணொளி)
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதன்போது காவல்துறையினரின் கரங்களைப் பிடித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது போலவே இன்றும் அங்கு ரணிலின் தலைமையில் சிறிலங்காவின் தேசிய பொங்கல் ஒரு அரசியல் பொங்கலாக பொங்க, அதற்கு அருகே அன்றும் இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீர் விட்டழுது தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம் - ஆர்பாட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் (காணொளி) |
ரணில் யாழ் வருகை - முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்..! தடுத்து நிறுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
