யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் ஏப்ரல் 9 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
டித்வா புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து, தொடருந்து பாதையில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காலை 5:15 மணியளவில் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி தொடருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1:05 மணிக்கு கல்கிசை நோக்கி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடருந்து சேவைகளுக்கு இன்று (05) முதல் இருக்கை முன்பதிவு வசதிகள் உள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே தொடருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதால், பயணிகளின் பயணம் கணிசமாக எளிதாகும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு இது ஆதரவளிக்கும் என்றும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |