அர்ச்சுனா எம்.பி தொடர்பில் யாழ்.சந்தை வியாபாரிகளின் நிலைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் (Ramanathan Archchuna) மாத்திரமே தங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என கொடிகாமம் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். (Jaffna) - கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை சாவகச்சேரி பிரதேச சபையினர் வெட்டியதாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாவகச்சேரி பிரதேச சபையினர் தங்களது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், சந்தையை முறையாக சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமது பிரச்சினைகளுக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தருமாறு கொடிகாமம் சந்தை வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
