யாழ். பல்கலைச் சூழலில் பொலிஸ், இராணுவம் குவிப்பு
நாளை மே 18 - யாழ். பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால், பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக் கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
நாட்டில் எழுந்துள்ள கொரோனா பெருந்தொற்று நிலமைகளை அடுத்து, இம் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்கைகள் தவிர மாணவர்கள் உள்நுழைவு தடுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. எனினும் பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் சிலர் நாளை 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை செய்வதற்குத் தயாராகி உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதனால், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தைச் சுற்றி இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்