இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தும் நினைவேந்தல்!
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஈகைச் சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.
சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இன்று காலை பிரசன்னமாகியிருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அனுஸ்டிக்கப்பட்டது.
தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், போர் முடிவுறுத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைகின்ற போதும் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டதற்கு நீதி கிட்டவில்லை என்பதை நினைவு கூர்ந்து 12 நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அக வணக்கத்தினைத் தொடர்ந்து பிரதேச சபையின் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் பொது ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். பிரதேச சபை வளாகத்தில் உள்ள நினைவேந்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்