இலங்கை உட்பட பல நாடுகளுக்கு ஜப்பான் விதித்த எல்லைக் கட்டுப்பாடுகள்!
கொரோனா பரவல் காரணமாக ஜப்பானிய அரசாங்கம் இன்று முதல் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்வதாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.
இத்தகவலை அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொவிட்-19 நிலைமையைச் சமாளிக்க விதிக்கப்பட்ட டோக்கியோவுக்கான ஒரு மாத கால அவசரகால நிலை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அத்துடன் ஜப்பான் தனது எல்லைகளை ஜனவரி 14 முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை மூடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளில் தாய்வான், ஹாங்காங், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, வியட்நாம், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.