அரசாங்கத்திற்கு எதிரான பேரணியிலிருந்து பின்வாங்கிய ஜீவன்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளது.
இதனை கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனநாயகத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் தேவையான இடங்களில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி
கூட்டு எதிர்க்கட்சி என அழைக்கப்படும் கட்சி மூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இதேவேளை, மேலும் பல எதிரக்கட்சியின் அரசியல் பிரமுகர்களும் குறித்த பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |