அநுர அரசுக்கு எதிரான பேரணி அநாவசியமானது: சம்பிக்க ரணவக்க
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பேரணியில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுவது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் இது ஒரு அநாவசியமான பேரணி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் வழங்கியுள்ள ஆணை
இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஆணை வழங்கியுள்ள நிலையில், பேரணிகள், போராட்டங்களினால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

அத்துடன், எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கொள்கைத் திட்டம் ஏதும் கிடையாது என்றும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதாயின், முதலில் எதிர்க்கட்சிகளிடம் ஏற்றுக்கொள்ளக் கூடிய கொள்கைத் திட்டம் இருத்தல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |