அநுர அரசுக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம் ...! தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு
நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக எதிரணிகள் அனைத்தும் இணைந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள மாபெரும் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்வதா வேண்டாமா என்ற குழப்ப நிலையில் சில கட்சிகளும் கூட்டணிகளும் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பங்கேற்கப் போவதில்லை
எனினும், தாங்கள் அந்தப் பேரணியில் பங்கேற்கமாட்டோம் என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது கட்சியும் அந்தப் பேரணியில் பங்கேற்காது என்றும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நவம்பர் 21 ஆம் திகதி நடத்தவுள்ள, பேரணியில் பங்கேற்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தாம் நவம்பர் 21 பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லையென மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இந்த பேரணியில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |