நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதி : வலி கிழக்கு தவிசாளரிடம் காவல்துறை விளக்கம் கோரல்

Missing Persons Jaffna Sri Lanka Police Investigation chemmani mass graves jaffna
By Theepan Aug 15, 2026 12:57 PM GMT
Report

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம் இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு வழிவகுக்கும் விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்டு அவ்வாறான ஒரு போராட்டத்திற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் காவல்துறை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று சனிக்கிழமை (15) வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும் என விளக்கம் கேட்டு யாழ்ப்பாண காவல் நிலைய தலைமையகத்தால் கேள்வி கேட்கப்பட்டு அவரது அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான காவல் பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் என்னை பதிலளிக்குமாறு கோரும் கடிதத்தினை கையளித்தனர்.

இனத்தவர்களுக்கிடையே அமைதியற்ற சூழ்நிலை 

அக் கடிதத்தில், செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன் பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப் போராட்டத்திற்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள் அனுமதி வழங்கியுள்ளமை காவல்தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாகவும் இவ்வாறான போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என காவல்துறை கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதி : வலி கிழக்கு தவிசாளரிடம் காவல்துறை விளக்கம் கோரல் | Justice S Voice Protest Issue

மேலும் காவல்தறை பொறுப்பதிகாரியின் கடிதத்தில், காவல்துறை தரப்பின் அனுமதியின்றி இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அதற்கான சட்டபூர்வமான அடிப்படை என்ன? இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால் எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சில அரசியல்வாதிகள் கருத்துக்களுக்கு எந்த பயமும் இல்லை: பிரியந்த வீரசூரிய

சில அரசியல்வாதிகள் கருத்துக்களுக்கு எந்த பயமும் இல்லை: பிரியந்த வீரசூரிய

மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் அனுமதி

 இந் நிலையில் ஜனநாயக ரீதியிலான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீதிகோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் காவல்துறை தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதி : வலி கிழக்கு தவிசாளரிடம் காவல்துறை விளக்கம் கோரல் | Justice S Voice Protest Issue

வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிறுநீரக கல்: திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை:

வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிறுநீரக கல்: திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022