அடுத்தடுத்து உயிரிழக்கும் களுத்துறை சிறைச்சாலையின் கைதிகள்
களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் உயிரிழந்த மூன்றாவது கைதி நேற்று (28) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான டபிள்யூ.ஏ.பந்துல என்ற 62 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
இந்நிலையில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை வடக்கு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான கைதி
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |