பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் போதைப்பொருள் வியாபாரியாகவும் அறியப்படும் கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் (France) அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, பாதாள உலக தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் பாதுகாப்பு பெறுவது இதுவே முதல் முறை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ள இம்ரான், துபாய் மாநிலத்தில் தங்கியிருந்த நிலையில், இந்த நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார்.
பிரான்ஸில் குடிபெயர்வு
பெப்ரவரி 2019 இல் துபாய் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியதையடுத்து, அவர் மன்னார் ஊடாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று பின்னர் பிரான்ஸில் குடிபெயர்ந்ததாக அந்த ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |