நான்கு மாதங்கள் கடந்தும் புனரமைக்கப்படாத வடமராட்சி கிழக்கு - கேவில் வீதி
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - கேவில் பிரதான வீதிக்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நான்கு மாதங்களுக்கு முன்பு அரச நிதியில் கேவில் பிரதான வீதி புனரமைப்பு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
உடனடியாக வேலைகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்த போதும் நான்கு மாதங்களை கடந்தும் வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இந்த வருடமும் இந்த வீதி புனரமைக்கப்படாது என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கேவில் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் இந்த வீதியால் பயணிப்பது சிரமமாக காணப்படுவதாகவும், பாடசாலை மாணவர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் ஏனைய தேவை நிமிர்த்தம் நாளாந்தம் பயணிப்பவர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாலும் உடனடியாக ஒதுக்கப்பட்ட நிதியில் குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |