கிளிநொச்சியில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான நான்கு பிள்ளைகளின் தந்தை
accident
kilinochchi
death
By Shalini
கிளிநொச்சி - கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கருகில் இன்று(23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் வயது 49 என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை பட்டா அல்லது வேறு வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது தலைப் பகுதியில் படுகாயமடைந்தவரை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதி விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி