கிளிநொச்சியில் கன மழை காரணமாக ஏற்பட்ட அவலம்!
kilinochchi
students
heavy rain
injury
wind
By Kalaimathy
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரி சோலை மற்றும் ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்களில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வன்னேரி சோலை பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக நான்கு வீடுகளும் ஆனைவிழுந்தான் குளம் கிராமத்தில் வீசிய சுழல் காற்று காரணமாக நான்கு வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்ட நிலையில் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
ஆனைவிழுந்தான் குளம் கிராமத்தில் காற்றின் காரணமாக தகரம் தூக்கி வீசப்பட்டதால் மூதாட்டி ஒருவருக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று பாடசாலை செல்லும் பிள்ளைகளின் புத்தகங்களும் மழையில் நனைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








