சுதந்திர தினத்தை கருப்புப்பட்டி அணிந்து கரி நாளாக அனுஷ்டிக்க அறைகூவல்!
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் கதிர்காமநாதன் கோகிலவாணியால் இன்று இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், வருகின்ற 4.02.2021 திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகவும் கருப்புப்பட்டி அணிந்தும் 2ம் திகதியிலிருந்து 6ம்திகதி வரையில் அடையாள உண்ணாவிரதமாக மேற்கொள்ள கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் அணி திரள்கின்றோம்.
அதேபொன்று 3.02.2021, 4.02.2021 திகதியும் மூன்று மாவட்டங்களிலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மற்றும் வர்த்தக சங்கங்கள், ஆட்டோ சங்க உறுப்பினர்கள், பேருந்து சங்க உறுப்பினர்கள் தமிழ் உறவுகள் அனைவரையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.