“தமிழின வரலாற்றில் கறைபடிந்த ஒன்றாகவே அமையும்” கண்டனத்துடன் வெளிவந்த அறிக்கை

jaffna festival kites reporte
By Vanan Jan 03, 2022 08:29 PM GMT
Report

தமிழினப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத் திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வழமைக்கு மாறாக, இவ்வாண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில் பட்டத் திருவிழா இடம்பெறுவதாக விமர்சித்துள்ளது.

தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சியின் அங்கமாக, இந்த நிகழ்வு நடைபெறுமாயின், தமிழின வரலாற்றின் கறைபடிந்த ஒன்றாகவே எதிர்வரும் காலங்களில் இந்த நிகழ்வு பதியப்படும் எனவும் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை மண்ணில் தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், சிறப்பாக நடத்தப்பட்டுவரும் பட்டத்திருவிழாவிற்கு இம்முறை பிரதமரின் புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ஸ அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என விழாவின் ஏற்பாட்டாளர்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்கி, அவர்களின் பங்குபற்றலுடன் இந்த விழாவை நடத்த அரச முகவர்கள் மேற்கொள்ளும் சதி முயற்சிக்குள், ஏற்பாட்டுக் குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியாகும் எனவும் முன்னணி கூறியுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை, இனப்படுகொலையாக விஸ்வரூபம் எடுத்த போது சிங்கள - தமிழ்த் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடுகள் முற்றியது எனவும் தமிழ் தேசிய முன்னணியில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் ஐக்கியமாக வாழமுடியாத நெருக்கடி நிலை தோன்றியபோது, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் சுதந்திரப்போராட்டம் உதித்த மண்ணில் நடக்கும் நிகழ்வுக்கு, தமிழினவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முற்படும் பேரினவாத முகவர்களின் திட்டமிட்ட சதிவலைக்குள் சிக்காது, ஏற்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என முன்னணி வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச அரங்கிலுள்ள, தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறல் விடயங்களை. சிறிலங்கா அரசு முற்றுமுழுதாகப் புறக்கணித்துவருவதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் இன்றும் வீதிகளில் நின்று, நீதிவேண்டிப் போராடிவருகிறார்கள் என்பதையும் முன்னணி நினைவுகூர்ந்துள்ளது.

தமிழர் தாயகம் மீது, திட்டமிட்டு சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடரும் சூழ்நிலையில், தமிழினவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அழைப்பதென்பதும், அதற்கு ஏற்பாட்டாளர்கள் தன்னிலை விளக்கம் கொடுப்பதென்பதும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத மிக மோசமான செயற்பாடு எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

வீரமும், தியாகமும், அளப்பரிய அர்ப்பணிப்புக்களும் நிறைந்த தமிழ் மண்ணில், அற்ப நலன்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் வரலாற்றில் என்றுமே மன்னிக்கப்பட முடியாதவையாகவே இருக்கும் என்பதை வலியுறுத்த விரும்புவதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது.

எனவே, குறித்த பட்டத் திருவிழாவுக்கு சிறிலங்கா இனப்படுகொலை அரசின் பங்காளிகளையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், விருந்தினர்களா அழைக்கும் முடிவை ஏற்பாட்டாளர்கள் உடன் நிறுத்த வேண்டும் என என முன்னணியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026