கொழும்பில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்குள்ளான கொலன்னாவ!
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள 413 கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டு இலட்சத்து 79 ஆயிரத்து 175 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அதன்படி, இந்த வெள்ள அனர்த்தத்தால் கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் 46 ஆயிரத்து 506 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 88 ஆயிரத்து 672 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்பு
கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவதாக கடுவெல பிரதேசம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, 9 ஆயிரத்து 490 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 167 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, ஹோமாகம மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தால் இவ்வாறு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ள அனர்த்தத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவெல, ஹோமாகம மற்றும் சீதாவக்க பகுதிகளில் மூவர் பேர் காணாமல் போயுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 6 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 1465 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |