வெளிநாடொன்றில் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் குடியுரிமை !
குவைத் (Kuwait) அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழ்ந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய ஆட்சி
குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இவர் 2023 டிசம்பரில் அதிகாரத்திற்கு வந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.
குவைத் குடியுரிமை
இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக, உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம் என அறிவித்து இந்த குடியுரிமை ரத்து நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

