லலித் - குகன் வழக்கு விசாரணை: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய
புதிய இணைப்பு
அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் குறித்த வழக்கு விசாரணையில் zoom தொழினுட்பத்தின் ஊடாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியங்களை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
அதற்கமைய கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இன்று வரை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றினார்.
2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த இரு அரசியல் செயற்பாட்டாளர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர், அப்போது பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்ச கடமையாற்றினார்.

கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளித்திருந்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்றுப் பல வருடங்கள் கடந்துவிட்டமையால், சில விடயங்கள் தமக்கு நினைவில் இல்லையென அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய, கோட்டாபய ராஜபக்சவிடம் மேலதிக சாட்சியங்களை விசாரிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |