வலி வடக்கில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் : வெளியான தகவல்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna
By Sathangani Jul 23, 2025 04:45 AM GMT
Report

யாழ்ப்பாணம் - (Jaffna) வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2,800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார். ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச செயலக தகவல்கள் கூறுகின்றன.

யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது

யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது

 6,317 ஏக்கர் காணிகள்

ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்தமானியில் 6,317 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலி வடக்கில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் : வெளியான தகவல் | Lands Acquired By The Military In The Vali North

அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள், ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம் கையளித்து வந்துள்ளன.

அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : அரசின் நிலைப்பாட்டை அறிவித்த நீதி அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : அரசின் நிலைப்பாட்டை அறிவித்த நீதி அமைச்சர்

விவசாய நடவடிக்கை

எனவே 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்த மானியை உடனடியாக இரத்து செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அந்த வர்த்தமானியை இரத்து செய்தால் மாத்திரமே தற்போது மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளில் அவர்கள் நிம்மதியாக வாழ முடியும்.

வலி வடக்கில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் : வெளியான தகவல் | Lands Acquired By The Military In The Vali North

அத்துடன், மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர்.

அவர்கள் தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது

யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021