தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை - 7 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஜாவத்த வளாகத்தில் வெளி தரப்பினர் பயன்படுத்திய பதின்மூன்று கட்டிடங்களுக்கு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான வாடகையை இலங்கை மகாவலி அதிகாரசபை வசூலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதின்மூன்று கட்டிடங்களுக்கான வாடகைப் பணத்தை மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் வசூலிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், 2020ஆம் ஆண்டு வரை பணம் அறவிடப்படவில்லை என அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த கட்டிடங்களுக்கான மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்காக இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபாவை அதிகார சபை செலுத்தியுள்ள போதிலும் குறித்த பணம் உரிய தரப்பினரிடமிருந்து மீளளிக்கப்படவில்லை என கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
களஞ்சியசாலைகளுக்கு வாடகை

2019 ஆம் ஆண்டு முதல் அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அதிகாரசபைக்கு சொந்தமான நாற்பத்து மூன்று களஞ்சியசாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் டிசம்பர் 31, 2019 வரை அந்தக் களஞ்சியசாலைகளுக்கு வாடகை வசூலிக்கப்படவில்லை என்று தணிக்கை அறிக்கை காட்டுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை மகாவலி அதிகார சபையின் 2019 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.