பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சாகர காரியவசத்திற்கு சவால்
பொதுஜன பெரமுன தொடர்பில் தவறான தகவல்களை கூறாமல் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பெரமுனவின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா சவால் விடுத்துள்ளார்.
புதிய கூட்டணிக்கு எதிராகவும் தனிப்பட்ட ரீதியில் தனக்கு எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில்

இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க பதில்களை வழங்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இல்லாதவர்களே தற்போது அதன் உரிமையாளர்களாக இருந்து கொண்டு கட்சியின் வரலாற்றை திரித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டதை மறந்து

புதிய அரசியல் கூட்டணி உருவானதன் காரணமாகவே இவ்வாறு நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
தாம் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டதை மறந்துவிட்டு சாகர காரியவசம் இவ்வாறான திரிபுகளை ஏற்படுத்தி வரலாற்றை மாற்றுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா குற்றம்சாட்டியுள்ளார்.