மத்திய வங்கியின் செயலால் ஏற்படவுள்ள நிதி நெருக்கடி - அச்சிடப்பட்ட பல பில்லியன் ரூபா..!
உள்நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கு போதுமான அளவு பத்திரங்கள் விற்பனை செய்யப்படாமை காரணமாக இலங்கை மத்திய வங்கி மேலும் 64 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.
மத்திய வங்கி அண்மையில் அச்சிட்டுள்ள மிகப்பெரிய பணத்தொகையாக கருதப்படுவதோடு The Central Bank Has Printed Money Again மூலமாக 160 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிணைமுறி ஏலத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு 124 பில்லியன் ரூபாவையே ஈட்ட முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாகவே மேலும் 64 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு கடனை செலுத்துவதற்கு பணம் சம்பாதிப்பதற்கான பிற ஆதாரங்கள் இல்லாததால் பணம் அச்சிடுவதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாணய நிதிய பேச்சுவார்த்தை
நாட்டில் 2022 ஜனவரி 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 28 ஆம் திகதிவரையான இரு மாத காலத்துக்குள் 216, 470 மில்லியன் ரூபாவை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.
இதனால் நாட்டுக்குள் டொலர் பிரச்சினை மாத்திரமல்லாது செலவழிப்பதற்கு ரூபா இல்லாமல் நிதி பிரச்சினை ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் நாட்டின் கடன் செலுத்தும் நடவடிக்கைக்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கமும் காணப்படாத நிலையில் பணம் அச்சிடுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதில்லை என அறியமுடிகிறது.
வருவாய் சட்டம்
கடந்த காலங்களில் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கோ செலவினத்தை குறைப்பதற்கோ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது காரணமாக பணம் அச்சிடுவதற்கும், அச்சடிக்கும் பணம் உணவுத் தேவைக்கு பயன்படுத்த முடியாமல் இருப்பதால் நாட்டுக்குள் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
மேலும், உள்ளூர் வருவாய் (திருத்தம்) சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட வரிகள் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.