மஹேலவைத் தொடர்ந்து லசித்மலிங்கவும் மும்பை இந்தியன்ஸிலிருந்து விலகினார்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேல ஜயவர்த்தன விலகிய நிலையில் தற்போது பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த லசித் மலிங்கவும் விலிகியுள்ளார்.
இலங்கை ஜாம்பவானான மலிங்க, ஐபிஎல் (IPL) 2024 முதல் 2026 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் மிக முக்கியமான நபர்
"லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், இந்த அணியின் வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் படையை வழிநடத்தியது முதல், நான்கு ஐபிஎல் சாம்பியன் பட்டங்கள் மற்றும் 2011 சாம்பியன்ஸ் லீக்ரி20 (Champions League T20) வெற்றியில் முக்கியப் பங்காற்றியது வரை, அதன் பிறகு ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் திரும்பியது என, மும்பை இந்தியன்ஸ் அணியுடனான மலிங்கவின் பயணம் மிகவும் சிறப்பானது.
மலிங்கவின் பயணம் மிகவும் சிறப்பானது
அவரது ஆர்வம், போட்டித்தன்மை மற்றும் அணிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை பல தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளித்துள்ளன. அவரது பங்களிப்பு எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக நிலைத்திருக்கும்" என்று மும்பை இந்தியன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |