சிறிலங்காவை கலக்கிய குண்டுத்தாக்குதல் கடிதம் - பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்
குண்டுதாக்குதல் கடிதம்
சிறிலங்காவில் கரும்புலிகள் நாள் மற்றும் கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூறும் வகையில் இம்மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என, உறுதிப்படுத்தப்படாத புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி, காவல்துறைமா அதிபர் வெளியிட்டுள்ள கடிதம் பேசுபொருளாகியுள்ளது.
எனினும் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான களநிலைமைகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி - தென்னிலங்கையில் மற்றுமொரு குண்டுத்தாக்குதல் எச்சரிக்கை - காவல்துறைமா அதிபர் கடிதம்! |
பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
பொது மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதன் காரணமாக புலனாய்வு தரப்பினருக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்த மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், தங்களது நாளாந்த நடவடிக்கைகளை வழமைப்போன்று மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

