சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது : லசந்த அழகியவண்ண சவால்

SLFP Lasantha Alagiyawanna Local government election Sri Lanka 2025
By Sathangani May 13, 2025 03:58 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும் எனவும் சுமார் 100 சபைகளில் எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றங்களில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சபைகளை நிறுவுதல், கூட்டணியமைத்தல் குறித்து அரசியல் குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்

யாழில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்

வேட்புமனு தாக்கல்

கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். வேட்புமனு தாக்கலின் போது இடம்பெற்ற தவறுகளை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது : லசந்த அழகியவண்ண சவால் | Lg Councils Cannot Form A Gov Without Slfp Support

ஏனைய கட்சிகள் சபைகளை அமைப்பதற்கு எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். அத்தோடு சில உள்ளூராட்சி மன்றங்களில் ஏனையோரின் ஒத்துழைப்புடன் எமக்கு ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை கூட காணப்படுகிறது. இது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

சில தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படக் கூடிய சேவைகள் தொடர்பிலேயே விசேட அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்க அறிவிப்பு

உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்க அறிவிப்பு

 ஜனாதிபதியின் அச்சுறுத்தல்

சுமார் 100 உள்ளூராட்சி மன்றங்களில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது. எனினும் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.

சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது : லசந்த அழகியவண்ண சவால் | Lg Councils Cannot Form A Gov Without Slfp Support

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் ஆளுந்தரப்பினர் சில பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். தமக்கு வாக்களிக்காவிட்டால் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அச்சுறுத்தினார். அவரைப் பின்பற்றியே ஏனையோரும் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எனினும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் எம்மால் 40 சபைகளில் ஆட்சியமைக்க முடியும்“ என தெரிவித்தார்.

இளைஞன் மீது தாக்குதல் : தப்பிச் சென்ற டீச்சர் அம்மாவை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள்

இளைஞன் மீது தாக்குதல் : தப்பிச் சென்ற டீச்சர் அம்மாவை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026