மே மாதத்தில் மூன்று நாட்களுக்கு மூடப்படும் மதுபானக் கடைகள்
மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு, மே மாதத்தில் மூன்று நாட்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, சர்வதேச தொழிலாளர் தினமான மே 1-ஆம் திகதி மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
அதனைத் தொடர்ந்து, வெசாக் பௌர்ணமி தினமான மே 30-ஆம் திகதியும் அதற்கு அடுத்த நாளான மே 31-ஆம் திகதியும் மதுபானக் கடைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, மே 30-ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே 31-ஆம் திகதியை பொது விடுமுறை தினமாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், மே மாதம் 27-ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை "தேசிய வெசாக் வாரமாக" அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தத் தினங்களில் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்