இந்திய தேர்தலில் புதிய உச்சம்...! 64.2 கோடி பேர் வாக்களித்து உலக சாதனை
இந்திய (India) மக்களவை தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் இந்தியா உலக சாதனையை இந்தியா உருவாக்கியுள்ளது என்று இந்திய தேர்தல்கள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், நாளை எண்னப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில் டெல்லி(Delhi) யில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
64.2 கோடி பேர் வாக்குப்பதிவு
அப்போது பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்(Rajiv Kumar), “. பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தலில் பங்கேற்று அதனை வெற்றிகரமானதாக மாற்றியுள்ளனர்.
#WATCH | Delhi | Election Commission of India gives a standing ovation to all voters who took part in Lok Sabha elections 2024 pic.twitter.com/iwIfNd58LV
— ANI (@ANI) June 3, 2024
தேர்தல் தொடர்பாக இதுவரை இல்லாத அளவில் 100 செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளோம் 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் - உலகிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும்.
பெண்கள் மட்டுமே 31.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டோரும், மாற்றுத்திறனாளிகளும் அதிக எண்ணிகையில் வாக்களித்துள்ளனர்.
தேர்தல் பணியில் ஒன்றரை கோடி பேர்
ஜி7 ஒட்டுமொத்த வாக்களர்களின் எண்ணிக்கையை விட, இந்தியாவில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கு அதிகம். 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட, இரண்டரை மடங்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒன்றரை கோடி பேர் பணியில் ஈடுபட்டனர்.
பாரபட்சம் இன்றி நடவடிக்கை
நக்சல் பாதிப்புகள் இருக்கும் பகுதிகளில் கூட அதிக வன்முறை இன்றி தேர்தல் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர், கட்சி தலைவர் என பாரபட்சமின்றி உலங்கு வானூர்திகளும் சோதனையிடப்பட்டன.
நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதற்காக பல்வேறு தலைவர்களுக்கு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது.
விதிமீறல் தொடர்பாக சுமார் நான்கரை லட்சம் புகார்கள் வந்த நிலையில், அதில் 99.9% சதவிகித புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட தலைவர்களுக்கு எதிராகவே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கமளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |