அந்தமான் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தப் பகுதி
தெற்கு அந்தமான் கடற்பரப்பில், வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் நிலவிய கீழ்மட்ட கொந்தளிப்பானது இன்று (29) காலை சுமார் 11.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 31 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 2 நாட்களுக்கு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம்
வானிலை ஆய்வு மைய ஆலோசனை பிரிவால் குறிக்கப்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 கி.மீ. வரை அதிகரிக்கும், மேலும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடல் பகுதியில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்கள், இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளைக் கவனமாகப் பின்பற்றி, விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |