அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு! கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் குறித்த கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படக்கூடிய அபாயம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து பலநாள் கடற்றொழில் படகுகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய வானிலை அறிவித்தலின் அடிப்படையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காற்றழுத்தப் பிரதேசம்
நாட்டின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள வானிலை நிலைமை தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இந்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தக் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் படிப்படியாக வலுவடைந்து இந்தியாவை நோக்கி நகர்ந்து, இந்தியத் தரைப்பரப்பை அடையும் நிலை காணப்படுகிறது.
இதன் தாக்கம் முழுமையாகத் தணிவடைய மேலும் சில நாட்கள் ஆகலாம்.
உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
இதனையடுத்து, அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் பலநாள் கடற்றொழில் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, குறித்த பிரதேசத்திலிருந்து உடனடியாக வெளியேறி கரையை நோக்கியோ அல்லது வேறு பாதுகாப்பான பிரதேசங்களுக்கோ செல்லுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் குறைந்த காற்றழுத்தப் பிரதேசத்திலிருந்து விரைவாக விலகிச் செல்வதற்காக இலங்கையை நோக்கி (தெற்கு திசையில்) பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, குறித்த பிரதேசத்திலிருந்து உடனடியாக வெளியேறி கரையை நோக்கியோ அல்லது வேறு பாதுகாப்பான பிரதேசங்களுக்கோ செல்லுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் குறைந்த காற்றழுத்தப் பிரதேசத்திலிருந்து விரைவாக விலகிச் செல்வதற்காக இலங்கையை நோக்கி (தெற்கு திசையில்) பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |