விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடனா - உலக மக்களை முட்டாளாக்கும் பேச்சு; கருணா வெளியிட்ட தகவல்!
Vinayagamoorthi Muralidaran
Sri Lanka
Sri Lanka Final War
India
Pazha Nedumaran
By Kalaimathy
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பது என்பது முற்று முழுதாக பொய்யான தகவல் என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
தலைவர் உயிருடன் இருக்கின்றார் என பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயம் தொடர்பாக, ஊடகவியலாளர் கருணாவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரண்டு விடயங்கள் இருக்கிறன, முதலாவதாக தலைவர் களத்தில் மடிந்தது என்பது உண்மையான விடயம், அது பெருமையாக யோசிக்க வேண்டிய விடயம் என்பதே எனது கருத்து.
பொய்யான வதந்தி

மற்றையது, தலைவர் விடயங்கள் தொடர்பாக பிழையான வதந்திகளை பரப்பி உலக மக்களை முட்டாளாக்கும் செயற்பாடாகவே தான் பழ நெடுமாறன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை நான் பார்க்கின்றேன்.
ஆகவே இது முற்று முழுதான ஒரு தவறான விடயம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி